Fight || சென்னையில் சிதறிய பூக்கடை.. களேபரமான சந்தை கும்பல் கும்பலாக இளைஞர்கள் சரமாரி தாக்குதல்
பூக்கடை ஆண்டரசன் சாலையில், அழைப்பிதழ்கள் தயாரித்து அச்சிடும் கடை ஒன்றின் ஓட்டுநர், காரை பின்னால் இயக்கும்போது மற்றொரு கடை ஊழியரின் வாகனத்தில் மோதியுள்ளார். இதுதொடர்பாக 2 கடை ஊழியர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் ஒரு தரப்பினர், அடி ஆட்களை அழைத்து வந்து, மற்றொரு கடை ஊழியர்கள், உரிமையாளர் உள்ளிட்ட அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, போலீசார் ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.