ஆக்ரோஷமாக ஓடிவரும் காவிரி நீர் -ஒகேனக்கல்லில் மீண்டும் உயர்ந்த நீர் வரத்து
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து மீண்டும் உயர்வு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் காவிரி நீரின் அளவு, 18,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியிலும், காவிரி கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 20,000 கன அடியை தாண்டி நீர் வரத்து அதிகரித்தால், நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.