சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் - நயினார் நாகேந்திரன் பதிவு
சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது புகழை போற்றுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர், சபாநாயகர் என்று பன்முகம் கொண்டு இதழியல் முன்னோடியாக இருந்து தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சிக்கு வித்திட்டவர் சி. பா. ஆதித்தனார் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.