Dindigul | Kidnap | மோசடி மன்னனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை, மகன் - அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-06-22 05:26 GMT

மோசடி மன்னனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை, மகன் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

பண மோசடியில் ஈடுபட்டவர் கடத்தல் - 5 பேர் கைது

திண்டுக்கல் - நத்தம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக முருகன் என்பவரை கடத்திய பாதிக்கப்பட்டவர்கள்

முருகனை கடத்திய 5 பேர் கைது - 2 பேர் தலைமறைவான நிலையில் போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளராக முருகன் பணியாற்றி வந்துள்ளார்

மதுரையை சேர்ந்த குமாரின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக 5 தவணைகளாக ரூ.10 லட்சம் முருகன் பெற்றதாக புகார்

பணத்தை பெற்றுக் கொண்ட முருகன் வேலை வாங்கித் தராமல் 5 மாதங்களாக பல பொய் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றியதாக புகார்

சந்தேகம் அடைந்த குமார் தனது உறவினர்கள் 5 பேருடன் சென்று முருகனிடம் நைசாக பேசி காரில் அழைத்து சென்றுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்