ஒரே நாளில் உயிரிழந்த தந்தை, மகன்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரே நாளில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தை கோவிந்தன் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை மகன் பாலமுருகனுக்கு தெரியப்படுத்த தொலைபேசியில் அழைத்த போது , அவர் அழைப்பை எடுக்கவில்லை, சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது மெடிக்கல் கடை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கடையைத் திறந்து பார்த்தபோது பாலமுருகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.