விசாரிக்க சென்ற அதிகாரிகளின் பைக்குகளை பறித்து தாக்கிய விவசாயி?

Update: 2025-07-10 04:34 GMT

மண் கடத்தல் - விசாரிக்க சென்ற வருவாய்துறையினரின் பைக்குகள் பறிப்பு

சேலம் மாவட்டம் அரசிராமணி செட்டிபட்டி அருகே மணியன்காடு பகுதியில், வருவாய் அதிகாரிகளுடன் விவசாயியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு புறம்போக்கு நிலத்தில் மண் உள்ளிட்ட கனிமவளங்களை கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், விசாரணைக்காக சென்ற வந்த அதிகாரிகளின் பைக்குகளை விவசாயியின் குடும்பத்தினர் பறித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இரவில் வந்த அதிகாரிகள் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதனால் சந்தேகப்பட்டு அவர்களை தாக்கிவிட்டதாகவும், விவசாயி தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் கனகராஜ் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த தேவூர் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்