"பீகாரிகளும் இங்கு ஓட்டு போடலாம்... உரிமை உண்டு" - அடித்து சொல்லும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
"பீகாரிகளும் தமிழ்நாட்டில் ஓட்டு போடலாம்... முழு உரிமை உண்டு" - அடித்து சொல்லும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒருபக்கம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தை முந்திக்கொண்டு தொடங்கிவிட்டன. மக்களை சந்திக்கும் பயணங்கள் நடந்து வருகின்றன. இன்னொருபக்கம் வாக்காளர் பட்டியல்ல சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக, பல லட்சம் பேரை நீக்கிவிட்டார்கள்னு, பீகார்ல வெடித்த சர்ச்சை இப்போது, தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறது. காரணம், பீகாரை சேர்ந்த ஆறரை லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க முயற்சி நடந்துவருவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நேரத்துல சொந்த ஊரில் ஓட்டு போட வேண்டுமா..? வசிக்கும் இடத்தில் வாக்களிக்க வேண்டுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கு. முதலில் பின்னணியை பார்த்துவிடலாம்.