"இதுலயுமா.." - லோடு வாகனத்தை சோதனை செய்த போலீசுக்கு பேரதிர்ச்சி

Update: 2025-07-02 03:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், லோடு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 500 கிலோ குட்காவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பூதகுடி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லோடு வாகனத்தை சோதனை செய்தன‌ர். அப்போது, வாகனத்தின் உள்ளே ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்த‌து தெரிய வந்த‌து. உள்ளே பார்த்த‌போது, மூட்டை மூட்டையாக 500 கிலோ குட்கா இருந்த‌தை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவை சேர்ந்த நவீன்குமார் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்