6 கடைகளில் பூட்டை உடைத்தும் ஒத்த பைசா தேறல.. விரக்தியில் திருடர்கள் செய்த செயல்
6 கடைகளின் பூட்டு உடைப்பு-பணம் கிடைக்காததால் கொள்ளையர்கள் விரக்தி
சென்னை வில்லிவாக்கத்தில் 6-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்கள், பணம் ஏதும் கிடைக்காததால் விரக்தியில் சென்றனர். வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் கிட்டு என்பவர், தனது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். இதனைத் தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்து சில கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. சிசிடிவியை ஆய்வு செய்ததில், நள்ளிரவு 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் கடப்பாரையுடன் வந்த மூவர், வரிசையாக ஒரு ஒரு கடையின் பூட்டை உடைத்தது தெரிந்தது. பிறகு எந்த கடையிலும் பணம் கிடைக்காததால் விரக்தியில் கடப்பாறையை சாலையில் வீசி சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.