Elephant Attack | ரோட்டோரம் நடந்து சென்ற விவசாயியை... தாக்கி கொன்ற காட்டுயானை -அதிர்ச்சியில் மக்கள்

Update: 2025-07-21 14:56 GMT

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பவளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னச்சாமி, வனப்பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக கடம்பூர் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாராணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்