வீட்டில் மின்கசிவால் தீ விபத்து
வாணியம்பாடி அருகே உள்ள வீட்டில், மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ராஜ்கமல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள மோட்டார் சுவிட்ச் பாக்ஸில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து மீட்டர் பாக்ஸ் முழுவதும் மளமளவென தீ பரவ தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின் போது வீட்டில் உள்ளவர்கள் முதல் தளத்தில் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.