கரைபுரளும் கங்கை - மூழ்கிய கோயில்கள், வீடுகள் - தவிக்கும் வாரணாசி மக்கள்
கங்கை நதியின் அளவு கனிசமாக உயர்ந்து வருவதால் வாரணாசியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக, சுமார் 10 முதல் 15 செ.மீ வரை கங்கை நதியின் அளவு உயர்ந்து கோயில்களுக்குள்ளும்,வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுவதால் சுற்றுலா பயணிகள் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். பொதுவாக மாலை வேளைகளில் கங்கைக்கு 50 ஆயிரம் பேர் வரும் நிலையில், இந்த வெள்ளத்தால் 5 ஆயிரம் பேர் மட்டுமே வருவதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.