போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை போலீசார், டெல்லியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த நபர் உட்பட 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 15 கிராம் கொக்கைன், 5 கிராம் மெத்தபெட்டமைன், 7 கிராம் ஹெராயின் உள்ளிட்டவையை பறிமுதல் செய்தனர். சமீபத்தில் மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் பிடிபட்ட 12 பேரிடம் நடத்திய விசாரணையில், டெல்லியில் பதுங்கி இருந்த இந்த 2 பேரை பற்றி தெரியவந்தது. இதையடுத்து, டெல்லி சென்ற சென்னை அண்ணா சாலை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். விசாரணைக்காக இருவரையும் சென்னை அழைத்து வர உள்ளனர்.