வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோன் | வைரலாகும் வீடியோ குறித்து விசாரணை
வனப்பகுதிக்குள் அத்துமீறி ட்ரோன் வீடியோ எடுத்த நபர் குறித்து விசாரணை
வால்பாறை வனப்பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த யானையை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துவைத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வீடியோ பதிவு செய்த நபர், வனத்துறையின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பயன்படுத்தியதுடன், உறங்கிக் கொண்டிருந்த வனவிலங்குகளை தொந்தரவு செய்ததாகவும் தெரிய வருகிறது. இது, வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும் என்றும், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர் மற்றும் அதை படம்பிடித்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.