திருநெல்வேலி to ராமேஸ்வரம்... அரசு பேருந்து ஓட்டுநர் செய்த செயல் - அதிர்ச்சி காட்சிகள்
திருநெல்வேலியில் அரசு பேருந்து ஓட்டுநர் ஃபோனில் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் ஃபோனில் பேசியபடியே அலட்சியமாக பேருந்தை ஓட்டியுள்ளார். இதனை பேருந்தில் சென்ற பயணி வீடியோக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் அலட்சியமாக பேருந்தை இயக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.