Doctor Nurse | திருமணத்திற்கு 'NO' சொன்ன டாக்டர்.. நர்ஸ் போட்ட ட்விஸ்ட் பிளான் - சென்னையில் பரபரப்பு
சென்னை ராமாபுரத்தில் காதல் பிரச்சினையில் வீட்டில் சிறை வைக்கப்பட்ட மருத்துவரை போலீசார் மீட்டனர். ஈரோடு சபரி கிளினிக்கில் பணிபுரிந்த ராமாபுரத்தை சேர்ந்த செவிலியருக்கும், மருத்துவர் சதீஷ்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செவிலியர் கேட்க அதற்கு மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மனம் உடைந்த செவிலியர் கிளினிக்கில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரை சமாதானம் செய்த மருத்துவர் சதீஷ்குமார், செவிலியரை வீட்டில் விட ராமாபுரம் வந்துள்ளார். அப்போது, அவரை சுற்றி வளைத்த செவிலியரின் உறவினர்கள், வாழ்க்கைக்கு வழி சொல்லாமல் செல்லக்கூடாது என வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். தகவல் அறிந்த ராமாபுரம் போலீசார், மருத்துவர் சதீஷ்குமாரை மீட்டனர்.