பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையின்போது பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்குக்கு போலீஸ் காவல் முடிந்து, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு, அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்கை, தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு மதுரை போலீசார், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஒரு வாரகாலம் தங்கள் காவலில் விசாரித்தனர். இந்நிலையில், விசாரணை முடிந்து அபூபக்கர் சித்திக்கை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.