தீபாவளி ரயில் முன்பதிவு - ராக்கெட் வேகத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

Update: 2025-08-18 13:43 GMT

Diwali Train Ticket Booking | தீபாவளி ரயில் முன்பதிவு - ராக்கெட் வேகத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

தீபாவளி ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 17ஆம் தேதி ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன.

கன்னியாகுமரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில் ஆகியவற்றில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளன.

தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு, தெற்கு ரயில்வே இறுதி கட்டத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது...

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களையும், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களையும் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்