ஈரோட்டில் தீபாவளி முடிந்தும், தள்ளுபடி தொடர்வதாக அறிவித்ததால் துணிகளை வாங்க அதிகாலை முதல் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளிக்கு மறுநாளும் ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகளில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி 30 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்கப்பட்ட துணிகளை வாங்க, அதிகாலை முதல் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். ஆஃபருக்கு ஆர்ப்பரித்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடை உரிமையாளர்கள் திணறிப் போயினர்.