ஜோசியம் பார்க்க வந்து கொஞ்ச நிமிடங்களில் மயக்கிய வாலிபர்.. கணவருக்கு அதிர்ச்சி

Update: 2025-04-11 10:38 GMT

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மலை கிராமமான ஆடலுாரில் கவிதா என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த வாலிபர் குறி சொல்வதாக கூறி பேச்சு கொடுத்து கவிதாவை மயக்கமடைய செய்து அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தபித்துள்ளார். சற்று நேரத்தில் அங்கு வந்த கணவர் சரவணன் வாலிபரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்து கன்னிவாடி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட நபர் மடத்துக்குளத்தை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்துள்ளது அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்