தவெக மாநாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோரை விஜய் மறைமுகமாக விமர்சித்ததாக அவரது பேச்சை சுட்டிக்காட்டி இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சிங்கம் பற்றி பேசும்போதும் சீமானை விமர்சித்ததாக சிலர் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அரசியல் பயணத்தில் ரஜினி, கமல் உள்ளிட்டோரை விஜய் மறைமுகமாக விமர்சித்ததாகவும் இணையத்தில் கருத்து பரவி வருகிறது.
இதேபோல, தனது உரையில், விசிக, பாமக, காங்கிரஸ் கட்சிகளை பற்றி பேசாத விஜய், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை புகழ்ந்து பேசியதை அரசியல் கணக்காக பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.