``இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ்'' - அமைச்சர் சொன்ன தகவல்
இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் டயாலிசிஸ் சிகிச்சை மையத்தில் புதிதாக 19 சிகிச்சை படுக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகிலேயே முதல்முறையாக டயாலிசிஸ் நோயாளிகளுக்கு இலவச புரத ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்..