Dharmapuri | Revenge Case | கணக்கு கேட்டதால் கொலை மிரட்டல்.. வெறியோடு வந்து நொறுக்கப்பட்ட சிசிடிவி

Update: 2025-11-13 07:39 GMT

தருமபுரி மாவட்டம், கருவேலம்பட்டி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வீட்டின் சிசிடிவி கேமராக்களை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த கிராமத்தின் ஊர் தலைவரான பாமகவை சேர்ந்த சரவணனிடம் வரவு செலவு கணக்கு கேட்டதற்காக, காளியப்பன் என்பவரின் குடும்பத்திற்கு சரவணன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுபோதையில் வந்த ஒருவர் காளியப்பன் வீட்டின் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காளியப்பன் மனு அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்