மருமகனை கொடூரமாக கொன்று தென்னை மரத்தில் கழுவேற்றிய மாமனார்,மாமியார்

Update: 2025-02-18 04:37 GMT

 மருமகனை மாமனாரும், மாமியாரும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் சில்லாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் மது அருந்திவிட்டு தனது மனைவி ரம்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ரம்யா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ரம்யாவின் வீட்டுக்கு மதுஅருந்திவிட்டு சென்ற சங்கர் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யாவின் தந்தை பச்சையப்பன் அவரது மனைவி கவிதா ஆகியோர் சங்கரை மண்வெட்டி மற்றும் உருட்டுகட்டையால் தாக்கி, கழுத்தில் கயிற்றை கட்டி தென்னை மரத்தில் தொங்கவிட்டு கொலை செய்தனர். இதன் பின்னர் பச்சையப்பன், அவரது மனைவி கவிதா இருவரும் காவல்நிலையத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்