சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆகஸ்ட் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் 9வது நாளில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடமிழுத்து வழிபட்டனர்.