கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் சிறப்பு மலர் வழிபாடு நடைபெற்றது. பல வண்ண மலர்களால் முருகப் பெருமானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக
நவதானியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முருகர், விநாயகர், வேல் ஆகியவற்றை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ராஜா அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.