TET ஆசிரியர் தகுதித் தேர்விற்கு 5 நிமிடம் தாமதமாக வந்ததாகக் கூறி தேர்வு எழுத அனுமதி மறுத்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த மூன்று பெண்கள் உட்பட ஒரு ஆண் 5 நிமிடம் தாமதமாக வந்ததாகக் கூறி தலைமை ஆசிரியரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் தேர்வு மையம் முன்பு சலசலப்பு நிலவியது. மேலும், இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தலைமை ஆசிரியர் தனது கடமையை தான் செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.