சீட்டு பணம் கேட்ட ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொ*ல மிரட்டல் - சென்னையில் பரபரப்பு
ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் சீட்டுப் பணம் கேட்ட ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஜீவா, நாகப்பன் ஆகியோர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், சீட்டுப்பணம் செலுத்திய நிலையில், கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இருவர், பணத்தை கேட்டால் ரவுடிகளை ஏவி கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த ஆடியோ வெளியான நிலையில், போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.