மதுரை மயானத்தில் இருந்து வெளியே வந்த சடலம் - பார்த்ததுமே நடுங்கி போன மக்கள்

Update: 2025-06-27 02:01 GMT

மதுரை வாடிப்பட்டி மயானத்தில் இட பற்றாக்குறை காரணமாக இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்குள்ள 8 வார்டு பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மயானம் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது. ஆனால் இங்கு போதிய இட வசதி இல்லாததால், உடல்களை புதைப்பதற்கு சிக்கலான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இறந்தவர் உடலை, பணியாளர்கள் மயான சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் வீசியதாக தெரிகிறது. இதனால் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதை கண்ட

மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த போலீஸார், அஜாக்கிரதையாக பணி செய்த பணியாளர்களை எச்சரித்தனர். விரைவில் கட்டப்பட்ட மின் மயானத்தை திறக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்