நடுரோட்டில் விறுவிறுவென நடந்து சென்ற முதலை - அதிர்ந்து போன பொதுமக்கள்.. வைரலாக பரவும் அதிர்ச்சி வீடியோ
குஜராத் மாநிலம் வதோரா பகுதியில் சாலையில் நகர் வலம் வந்த முதலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சாலையில் முதலையை பார்த்ததும் அச்சம் அடைந்த மக்கள், வாகனங்களை ஓரங்கட்டி அதை வீடியோ எடுத்தனர்.
கனமழை காரணமாக, முதலை தன் இயல்பான வாழ்விடத்திலிருந்து வெளியேறி, சாலைக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், முதலையை மீட்டு விசுவாமித்திரர் ஆற்றில் விட்டுச்சென்றனர்.