Srivilliputhur Viral Video | ஆபாச நடன வீடியோவால் வைரலான அர்ச்சகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட்

Update: 2025-07-03 02:58 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்களின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயில் விழா நடைபெற்ற நிலையில், அர்ச்சகர் கோமதி விநாயகம் மற்றும் தற்காலிக அர்ச்சகர்கள் மது போதையில் நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் பக்தர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து, கோமதி விநாயகம் உட்பட நான்கு பேரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில், நான்கு பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி விண்ணப்பத்த நிலையில், நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்