முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தவெக தலைவர் விஜய் மீதும், அக்கட்சி தொண்டரை தூக்கி வீசிய பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் சிவசாகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,
மதுரை தவெக மாநாட்டில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விஜய் கேலி செய்யும் விதத்தில் பேசியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மாநாட்டில் விஜய் அருகே வந்த தொண்டரை பவுன்சர்கள் மனிதநேயமற்ற முறையில் தூக்கி வீசியதையும் புகாரில் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.
இதனால் விஜய் மீதும், அவரது பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சிவசாகர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்