லஞ்சம் பெற்ற அதிகாரிகள் - பேனர் வைத்து அசிங்கப்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி
Sivagangai News | லஞ்சம் பெற்ற அதிகாரிகள் - பேனர் வைத்து அசிங்கப்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி
சிவகங்கையில் லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பட்டியலை பேனராக வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பொய்யாமணிப்பட்டி மற்றும் கொல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நீர்நிலை இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கொட்டகுடி ஊராட்சி வி.ஏ.ஓ செங்கதிர் மற்றும் அவர் உதவியாளர் ராமு ஆகியோர் ஆக்கிரமிப்பாளர்களிடம் பெற்ற லஞ்ச விவரத்துடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பொய்யாமணிப்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.