விவசாயிகளோடு இணைந்து விதை நெல் தெளித்த மாவட்ட ஆட்சியர்
மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகளோடு சேர்ந்து விதை நெல் தெளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். 12 மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து நேரடி நெல் விதைப்பு செய்யும் பணியை துவங்கி வைத்தார்.