"என்னை விடுங்க.." உயிரை வெறுத்து கதறிய சிறுமி.. குண்டுக்கட்டாக தூக்கி சென்ற இளைஞர் - ஷாக்கிங் வீடியோ
ஓசூர் அருகே 14 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த இளைஞர், தனது வீட்டுக்கு வர மறுத்த சிறுமியை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொட்டமஞ்சு மலைக்கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், காளிக்குட்டை என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் 2 நாட்களுக்கு முன் பெங்களூரில் கட்டாயத் திருமணம் நடந்துள்ளது. தாய் வீட்டுக்கு வந்த சிறுமி, கணவருடன் செல்ல மறுத்ததால் அவரை கணவர் மாதேஷ் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து, சிறுமியின் கணவர், தாயார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.