வீட்டில் விளையாடிய குழந்தை மாயம் - இரவு முழுவதும் பதற்றம்.. அடுத்து நடந்த ஆச்சரியம்

Update: 2025-12-06 11:46 GMT

கள்ளக்குறிச்சி அருகே நயினார்பாளையத்தில் ஒரு இரவு முழுவதும் 3 வயது குழந்தை காட்டுப்பகுதியில் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹரிஹரன் என்பவரது 3 வயது மகள் கிருத்திஷா வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விளையாடி கொண்டே குழந்தை நடந்து சோளக்காட்டிற்கு சென்ற நிலையில் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற உரிமையாளர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்