"காலில் காயம், கையில் சிகிச்சை..'' பறிபோன உயிர் - சென்னையில் பிரபல ஹாஸ்பிடலில் ஷாக்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவமனை முதல்வர் ஓய்வு பெற்று 2 மாதங்கள் ஆன நிலையில், அங்கு சிகிச்சையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர். தண்டையார்பேட்டையை சேர்ந்த மூதாட்டி காளீஸ்வரிக்கு காலில் காயம் ஏற்பட்டதற்கு, கையில் சிகிச்சை அளிக்க ஸ்கேன் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல், தண்டையார்பேட்டையை சேர்ந்த சிறுவன் கோகுல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ரத்தப் பரிசோதனை முடிவை தாமதமாக கொடுத்ததாக தெரிகிறது. சிறுவன் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த நிலையில், பெற்றோர் சோகமடைந்தனர்.