சென்னை திருவொற்றியூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் ரயில்வே தண்டவாளத்தை மக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, ரயில்வே கேட், கிராம தெரு ரயில்வே கேட் போன்ற மூன்று சுரங்க பாதைகளிலும் தற்போது பணிகள் நடைபெறுவதால் அவை மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பள்ளி குழந்தைகள் முதல் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து வருகின்றனர்.