போராட்டத்தில் காவலரின் மீது பட்ட தண்ணீர்.. தனது துண்டால் துடைத்து விட்ட முத்தரசன் - வைரல் வீடியோ
மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, காவலரின் முகத்தில் பட்ட தண்ணீரை அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது துண்டால் துடைத்த நிகழ்வு கவனம் பெற்றது. பாரிமுனையில், மத்திய பட்ஜெட்டின் நகலை எரிக்கும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாலர் ராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போது, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற காவலர் மீது தண்ணீர் பட்டது. அதனை முத்தரசன் தனது துண்டால் துடைத்தார்.