சென்னையில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த ஏசி மெக்கானிக் கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர் கிழக்கு நிழல் சாலை பகுதியில், சுதா என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிக்க முயன்ற நபரை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஏசி மெக்கானிக்கான கமலக்கண்ணன் ஆன்லைன் டிரேடிங் செய்ய கடன் வாங்கி பணத்தை இழந்ததால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புகொண்டுள்ளார்.