Chennai Latest News | Loan | கடனை திருப்பி கேட்டவர் கோர கொலை - 6 கொடூரன்களை கதறவிட்ட நீதிமன்றம்
சென்னை பெரியமேட்டில் கடனை திருப்பி கேட்ட பழ வியாபாரியை கொலை செய்த வழக்கில் ஒரு பெண் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு சென்னை பெரியமேடு வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த பழ வியாபாரி வேலுவை கடனை திருப்பிக் கேட்டதற்காக கலா மற்றும் அவரது உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. வாணி என்பவர் மட்டும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டார்.