முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் முருகன் சிலை அமைய உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை வழித்தடம், எந்த வகையிலும் பாதிக்காது என கூறியுள்ளது.
வனவிலங்குகளுக்கு இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மருதமலையில் முருகன் சிலையை நிறுவ உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும், நீதிமன்றத்துக்கு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது.