நாடு முழுவதும் அமையவிருக்கும் 35 மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்களில் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக திமுக எம்.பி. கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார். அதில் அதிகபட்சமாக மும்பை மற்றும் டெல்லியில் தலா 5 மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 641.92 கோடி ரூபாய் செலவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்கள் அமைய உள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.