Chennai Child Harassment | பப்ஜி விளையாட கூட்டிச்சென்று ஆபாச படம் காட்டி சிறுவர்களிடம் அசிங்கம்
பப்ஜி விளையாட அழைத்துச் சென்று சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல்
சென்னை தண்டையார்பேட்டையில் பப்ஜி விளையாட அழைத்துச் சென்று சிறுவர்களிடம், இளைஞர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று 12 வயதுடைய நான்கிற்கும் மேற்பட்ட சிறுவர்களை இளைஞர்கள் அழைத்துச் சென்று தனிமையில் ஆபாச படங்களை காண்பித்து, அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுவர்களின் பெற்றோர்கள் அளித்த தகவலின் பேரில் இரண்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.