Thirunelveli | 35 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித் தேரோட்டம் தொடங்கி வைத்த சேகர் பாபு, அப்பாவு
35 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித் தேரோட்டம்
தொடங்கிவைத்த அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
நெல்லையப்பர் கோயிலில் இருந்த வெள்ளித்தேரானது கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையானது. இதுகுறித்து பக்தர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து, 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெள்ளி தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.