சென்னையில் 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள சிங்கப்பூர், கொரியா,ஸ்பெய்ன்,ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட ஒன்பது வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, தூதரகங்களைச் சுற்றி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மிரட்டல் பொய்யானது என தெரிந்ததும் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.