சென்னையில் ரவுண்ட்ஸ் வந்த `மெத்’ - சிக்கிய `ஜாய்ஸ்’
மெத் போதைப்பொருள் விற்பனை - இளம்பெண் உட்பட மேலும் இருவர் கைது
சென்னையில் மெத் போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில் இளம்பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், இரு தினங்களுக்கு முன்பு
சிலர் மெத் போதைப்பொருளை கை மாற்றுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், சங்கரநாராயணன், பிரசாந்த், ஆகாஷ்குமார் மற்றும் மணிகண்டசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். 3 கிராம் மெத் போதைப்பொருள் மற்றும் 28 கிராம் கஞ்சா பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோதினி என்கிற ஜாய்ஸ், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த அவினாஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.