Chennai | வீட்டில் தனியாக இருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - அருகிலேயே குடியிருந்த காமுகன்..

Update: 2025-11-20 11:08 GMT

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் தனது மகள்களை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையறிந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான வினோத், அங்கு சென்று 2 சிறுமிகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்