"கட்சிப் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்" அதிமுகவை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்து அதிமுக அச்சப்படுகிறதா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ப.சிதம்பரம், மதுரை முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியார் அவமதிக்கப்பட்டதை அதிமுக அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்ததாக கூறினார். அதிமுக என்பதை நீக்கிவிட்டு இந்து முன்னணி முன்னேற்ற கழகம் என கட்சிப் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் ப.சிதம்பரம் அதிமுகவை விமர்சித்தார்.