CBI ட்ரீட்மென்ட் - அஜித் வழக்கில் இன்று முக்கிய திருப்பம்

Update: 2025-07-14 05:16 GMT

அஜித்குமார் கொலை வழக்கு - இன்று சிபிஐ விசாரணை தொடக்கம்

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், இன்று சிபிஐ விசாரணையை தொடங்குகிறது. திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சிபிஐக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து டெல்லி சிபிஐ டிஎஸ்பி மோகித் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் டி.எஸ்.பி மோகித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மடப்புரம் கோவில் எதிரே பக்தர்கள் தங்கும் விடுதியில் உள்ள மூன்று அறைகளில் இன்று விசாரனையை தொடங்குகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்